my images
திரு கதிர்காமு கணவதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 16 2011
திருமதி ரத்தினம்மா பொன்னுத்துரை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திரு வேலுப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திரு வேலுப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்டம்பர் 28 1985
திரு ராஜா திருமேனி அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 15 1988
திருமதி மனோன்மணி தம்பித்துரை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 2 1989
திரு சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 5 1992
திரு தம்பிப்பிள்ளை நடராஜா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 05 1995
திரு அருளம்பலம் தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 8 1996
அமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 3 1999
திருமதி மங்யையர்க்கரசி நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 12 2004
திருமதி ரத்தினம்மா நடராஜா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 12 2006
செல்வி ராசமலர் நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 6 2008
திருமதி மீனாம்பாள் கந்தையா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 27 2010
திரு சீனிப்பிள்ளை தம்பிராசா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 19 2010
திரு வைரமுத்து கதிர்காமநாதன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆவணி 03 2010
திருமதி நாகம்மா கதிர்காமு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 06 2010
திருமதி செல்லம்மா கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்கழி 17 2010
திரு சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - வைகாசி 20 2011
திருமதி அன்னலட்சுமி திருநாவுக்கரசு (பரிமளம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - புரட்டாதி 04 2011
திருமதி நாகேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - தை 07 2012
திரு சீனிப்பிள்ளை வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆனி 30 2012
திரு ஏகாம்பரம் ராஜா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆடி 19 2012
திரு சதாசிவம் சோமசுந்தரம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆவணி 14 2012
திரு சிவநாயகம் ஆறுமுகம் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு-புரட்டாதி 13 2012
திரு சுப்ரமணியம் சின்னத்தம்பி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஐப்பசி 19 2012
திருமதி சத்யபாமா சிவராசா (காந்தம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-கார்த்திகை 21 2012
திரு சற்குணநாதன் நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 06 2013
திரு சிவசுந்தரம் அருணாசலம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆவணி 18 2013
திருமதி செல்லம்மா நடராஜா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - புரட்டாதி 30 2013
திருமதி அன்னபாக்கியம் குமாரசாமி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஐப்பசி 31 2013
திரு சிவக்குமார் கந்தையா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மாசி 10 2014
திரு கணபதிப்பிள்ளை கிருஷ்ணர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பங்குனி 26 2014
திரு. தாமோதரம்பிள்ளை நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 28 2014
திருமதி நிற்குணானந்தன் அருள்நாயகி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 04 2014
திருமதி யசோதரன் மதுஷா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 04 2014
நிற்குணானந்தன் சுபாங்கன் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 04 2014
திரு.சிற்றம்பலம் மாணிக்கவாசகர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆவணி 17 2014
திரு.சுப்ரமணியம் குணசேகரம் (அப்பன்) அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - புரட்டாதி 24 2014
திரு.நாகலிங்கம் நவரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஐப்பசி 29 2014
திரு.வரதராசா பொன்னுத்துரை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்கழி 21 2014
திரு வேலுப்பிள்ளை தம்பித்துரை அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-பங்குனி 31 2015
திரு.சின்னப்பாபிள்ளை தம்பிமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 09 2015
திரு தாமோதரம்பிள்ளை லோகநாதன் (இந்திரன்) அவர்களின்
துயர்பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சித்திரை 27 2015
திருமதி நாகரத்தினம் தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 30 2015
Dr. ஞானசச்சிதானந்தசிவம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 13 2015
திருமதி. தங்கபாக்கியம் தங்கவேலாயுதம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆனி 07 2015
திருமதி மனோன்மணி கார்த்திகேசு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆனி 23 2015
செல்வி கந்தையா சிவஞானலட்சுமி (பூங்கொடி) அவர்கள்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆவணி 28 2015
திருமதி. பொன்னம்மா வேலுப்பிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - புரட்டாதி 30 2015
திருமதி சிவபாக்கியம் சுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - கார்த்திகை 19 2015
திருமதி விசாலாட்சி அம்மாள் கந்தசாமி ஜயர் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-தை 03 2016
திருமதி விசாலட்சிப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - தை 06 2016
திரு அரியராசா இராஜகோபால் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மாசி 09 2016
திருமதி நாகரத்தினம் இரத்தினசபாபதி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சித்திரை 11 2016
திரு வல்லிபுரம் வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆனி 05 2016
திரு. துரைரத்தினம் திருக்கேதீஸ்வரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆனி 25 2016
திரு கார்த்திகேசு கிருஸ்ணபவன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆவணி 08 2016
திருமதிஅன்னபாக்கியதேவி நவதவராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 23 (ஐப்பசி 07) 2016
திரு செல்வத்துரை சரவணமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 27 (ஐப்பசி 11) 2016
திருமதி சிவபதி தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 30 (ஐப்பசி 14) 2016
திரு.தி.சிவநேசபிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 15 (ஐப்பசி 30) 2016
திரு கணவதிப்பிள்ளை சதாசிவம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 4 (கார்த்திகை 19) 2016
திருமதி தங்கம்மா நல்லையா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 21 (மார்கழி 6) 2016
திருமதி தங்கம்மா கந்தையா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு சனவரி 27 (தை 14) 2017
திரு சுதாகர் நவரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 08 (தை 26) 2017
திருமதி சரஸ்வதி சுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 17 (பங்குனி 04) 2017
திருமதி ஆச்சிமுத்து வேலுப்பிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 1 (சித்திரை 18) 2017
திருமதி புஸ்பராணி சிவயோகம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 11 (சித்திரை 28) 2017
திரு தம்பு சந்திரபாபு மற்றும்
செல்வன் பிரியந்தன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 10 (வைகாசி 27) 2017
திரு கந்தையா அமிர்தஞானம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 24 (ஆனி 10) 2017
திருமதி பசுபதிப்பிள்ளை நடராஜா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 05 (ஆனி 21) 2017
திரு சுப்பிரமணியம் வீரகத்திபிள்ளை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 1 (புரட்டாசி 15) 2017
திருமதி கமலாதேவி சரவணபவான்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 17 (புரட்டாசி 31) 2017
திருமதி லலிதாதேவி (ராசு) தில்லைநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
திரு நல்லதம்பி வரதராஜன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
திரு நாகமுத்து சுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 22(கார்த்திகை 6) 2017
திரு இரத்தினசபாபதி வைரமுத்து
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
திருமதி தவமணிதேவி சீவரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
திரு கிருஷ்ணகுட்டி தவக்குமார்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 28(கார்த்திகை 12) 2017
திரு செல்லப்பு துரைரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 3 2018 (தை 21)
டாக்டர் நடராஜா ராஜகுமாரன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 25 2018(மாசி 13)
திரு இராசையா தருமரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 06 2018(மாசி 22)
செல்வி புனிதவதி இராசையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 16 2018(பங்குனி 02)
திருமதி தங்கரத்தினம் அப்புத்துரை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 02 2018(பங்குனி 19)
திருமதி கைலாசபதி தம்பிராசா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
திருமதி சந்திரவதனா சுந்தரலிங்கம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
திருமதி யோகானந்தசிவம் செல்வநாயகம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2018(வைகாசி 22)
திரு ஸ்ரீஸ்கந்தராஜா நல்லையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 16 2018(ஆனி 02)
திருமதி நாகபூசணியம்மா செல்லத்துரை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 14 2018(ஆனி 30)
திரு ஐயாத்துரை சிவநிதி (குட்டி)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 13 2018(ஆவணி 2)
திரு கந்தையா ஆறுமுகம் JP
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 1 2018(ஐப்பசி 15)
வளலாய் வரைபடத்தை பார்வையிட இங்கு கிளிக்குக Click here to see the Valalai Map
சுவிஸ்லாந்து வாழ் இடைக்காடு வளலாய் மக்கள்
ஒன்றுகூடல் அமைப்பினரின்
சுவடுகளை காண இங்கு கிளிக்குக
இலண்டன் ஐக்கிய இராச்சியங்கள் வாழ்
இடைக்காடு வளலாய் நலன்புரி சங்கத்தின்
சுவடுகளைக் காண இங்கு கிளிக்குக
இவ்வளலாய் ஆளுமைகள் பற்றித் தெரிந்து கொள்ள இவ்விடத்தல் கிளிக்குக.
பாரதி சனசமூக நிலைய விபரங்களைப் படிக்க இவ்விடத்தில் 'கிளிக்'குக
வளலாய் பிள்ளையார் பாலஸ்தாபனக் குடமுழுக்கு, குடமுழுக்கு,
தேர்த்திருவிழா 2014, வளலாய் பெரிய நாகதம்பிரான் மண்டலாபிஷேகம்
ஆகிய நிகழ்வுகளின் காணொளிகளின் முன்னோட்டம்
இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா
கிளையினால் 2016 2017 ம் ஆண்டுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட
பொங்கல் விழா நிகழ்வுகளில் செல்வி வந்திகா நிற்சுதன்
(குமுதினியின் மகள்) கலந்து கொண்ட
காணொளிகளை காண்பதற்கு இங்கு கிளிக்கிக் காண்க
வளலாய் ஒன்றுகூடல் 2016 இல் - நன்றி உரையின் ஒரு பகுதி
ஞானரூபனின் மகன் செல்வன் அஜே பாலசுப்ரமணியம் - வசந்தம் 2016
ஒப்புவிப்பு, அட்லான்டா, ஐக்கிய அமெரிக்கா இல் நடைபெற்ற வருடாந்த இசை நிகழ்ச்சி
மற்றும் ஜோஜியாவின் கர்நாடக இசைச் சங்க (CAMAGA) இசையமைப்பாளர்கள் தினம் 2017 இல்
ஞானரூபனின் மகன் அஜய் பாலசுப்ரமணியனால் இசைக்கப்பட்ட
வயலின் இசைக் காணொளிகளைக் காண இங்கு கிளிக்குக
இதிகாசங்கள், சர்வ மத இலக்கியங்கள், தேவார திருவாசகங்கள்,
சங்க இலக்கியங்கள்,பாரதியார், பாரதிதாசன் கவிதைகள்,
கல்கியின் படைப்புக்கள் ஆகியவற்றை இவ்விணையத்தளத்தில் இருந்து
முற்றிலும் இலவசமாக தரவிறக்கவோ பகிரவோ படிக்கவோ முடியும்
இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - கனடா
VALALAI RURAL DEVELOPMENT SOCIETY
Idaikkadu Maha Vidhiyalaya Old Students Association - Canada
IDAIKKADU OLD STUDENTS 2014
SWISS IDAIKKADU VALALAI GET TOGETHER
Idaikkadu Valalai Welfair Association - UK
வளலாய் பிள்ளையார் கோயில் விழாக்கள்
பிள்ளையார் வணக்கம் மற்றும் விரதங்கள்
புராணங்கள் மற்றும் புனைகதைகள் செவிவழிக்கதைகள்
ஆகியவற்றைப் படிக்க இங்கு கிளிக்குக.
பெரியதம்பிரான் ஆலய விபரங்களைப் படிக்க இங்கு கிளிக்குக
கனடா தமிழ் வண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வளலாய் கிராமம் பற்றிய
ஆவணப்படத்தின் காணொளிப் பிரதி வளலாய் இணய வாசகர்களுக்காக
இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ் வண்.
'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'
'அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா
கண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா'
என்ற இரு திரை இசைப்பாடல்களை செல்வன் ஆகாஷ்
சிவபாலன்இசைப்லகையில் இசைக்கும் காணொளியை இங்கு கிளிக்கிக் காணலாம்
 

July 30, 2016

 கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி பரிசளிப்பு விழா நிகழ்வுகளின் நிழல்கள் 11ம் பக்கம், ஆடி 29 ம் திகதிய தினக்குரல் நாளிதழில் - ஏனைய பிரமுகர்களுடன் வளலாயைச் சேர்ந்த அதிபர் வேலழகன் சண்.

May 18, 2016

வளலாயைச் சேர்ந்தவரும் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபருமான திரு. வேலழகன் சண் அவர்கள் திறந்த வெளி பல்கலைக்கழகம், பொதுநல வாய நாடுகளின் கற்றலுக் கான பிரிவினருடன் இணைந்து நடாத்தும் ஆசிரியர் கல்வியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அதற்கான பட்டமளிப்பு விழா சர்வதேச பண்டாரநாயக்க மண்டப அரங்கில் இடம்பெற்றது அச்சமயத்தில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

திரு. வேலழகன் சண் MATE (I)

[Master of Arts in Teacher Education (International)

திரு வேலழகன் சண் அவர்கள் அடைந்த இவ்வெற்றிக்காக அவரை மனமார வாழ்த்தும் கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியம், அவர் தன் வாழ்வில் மேன்மேலும் வெற்றிகளையும் பதவி உயர்வுகளையும் பெற எல்லாம் வல்ல வளலாய் பிள்ளையாரை வழிபடுகின்றனர்

February 22, 2017

Dr மனு வித்யா பாலரூபன்

செல்வி மனு வித்யா பாலரூபன் அவர்கள் அவுஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கட்டமைப்பு பொறியியலில் ஆய்வுமுனைவர் பட்டம் வென்றுள்ளார் அவர் தமது வாழ்வில் மேலும் வெற்றிகளைப் பெற்று சிறப்படைய கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியம் வாழ்த்துகின்றது.

February 21, 2017

செல்வி ரதி பிரியா பாலரூபன் MBBS

Dr Priya

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தில் மருத்துவக்கல்வி கற்ற செல்வி ரதி பிரியா பாலரூபன் இளம் மருத்துவர் கல்வியில் (MBBS) 2016 ஆம் வருடம் சித்தி எய்தியுள்ளார். அவருக்கும் அவர் பெற்றோருக்கும் கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

December 2, 2016

சுதர்சன் கணபதிப்பிள்ளை

சென்ற வருடத்தைப் போலவே இவ்வருடமும் கணக்கியல் துறை பீடாதிபதி, கணக்கியல் கற்பித்தலுக்காக சுதர்சன் கணபதிப்பிள்ளைக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளார்.. சுதர்சனின் சாதனைகளை வளலாய் இணையம் பாராட்டுவதோடு இம் மகிழ்ச்சியை வளலாய் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கின்றது

April 28, 2016

Dr. சுதர்சன் கணபதிப்பிள்ளை

வளலாய் இணையத்தினால் அடையாளங்காணப்பட்ட வளலாய் ஆளுமைகளில் ஒருவரான திரு சுதர்சன் கணபதிப்பிள்ளை அவர்களுக்கு அவுஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகத்தால், கணக்கியலில் அவர் எழுதிய ஆய்வேடுகளுக்காக ஆய்வு முனைவர் பட்டம், சித்திரை 19ம் திகதி வழங்கப்பட்டது. அந்நிகழ்வில் அவர் குடும்பத்தாருடன் கலந்து கொண்ட நிழற்படங்கள் கீழே இணைக்கப்படுகின்றன.

அவர் ஆர்வம் காட்டிய ஆய்வுகள் தன்விபரம் ஆகியவற்றை பின்வரும் இணைப்பைக்  ‘கிளிக்’ செய்து அறிந்து கொள்ளலாம்.

http://www.deakin.edu.au/profiles/sutha-kanapathippillai

அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் தமது வாழ்த்துக் களையும் பாராட்டுக்களையும் கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியமும் வளலாய் இணையமும் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கின்றன.

December 3, 2015

சுதர்சன் கணபதிப்பிள்ளை டீக்கின் பல்கலைக் கழகம் அவுஸ்திரேலியா இல் வர்தகம் மற்றும் சட்ட பீடத்தில் கணக்கியல் துறையில் விரிவுரையாளராகக் பணியாற்றி வருகிறார். விரிவுரையாளராகப் பணியாற்றும் இவருக்கு கணக்கியல் துறை தலைவர், ஆசிரியப் பணியில் இவரின் சிறப்புப் பங்களிப்புக்காக கார்த்திகை மாதம் 26 ஆம் திகதி 2015 ஆம் ஆண்டு கணக்கியல் துறை விருது வழங்கி கௌரவித்துள்ளார்.  இவருக்கு இவ்விருது கிடைத்தமையை வளலாய் இணையம் பாராட்டி மகிழ்வதோடு இச்செய்தியை புலம்பெயர் நிலங்களில் வாழும் வளலாய் உறவுகளுடன் பகிர்வதில் பெருமிதம் கொள்கின்றது.

October 27, 2016

திரு நாகலிங்கம் நவரத்தினம் அவர்களின்
ஈராண்டு நிறைவு 
நாள் - 05.11.2016.
திதி - ஐப்பசி வளர்பிறை சஷ்டி (ஆறாம் நாள்)

ஒரு விவசாயி

கலட்டியும் கள்ளியும் கலந்த பரப்பில்
விரட்டி விரட்டிப் பசுமை தரும் விவசாயக்குடியில்
பிறந்ததால் பிறந்தது பெருநாட்டம்
இறக்கையிலும் இருந்தது பசுந்தோட்டம்

இரட்டைப் பயிர்ச்செய்கையில் என்றுமே நாட்டம்
இதனால் விளைந்தது பற்பல மாற்றம்.
பேராற்றங் கரையோரம் தனிலும் - உன்
பேராற்றல் கண்டது மருததேசம்

நன்செய் புன்செய் நிலமெல்லாம்
உன் செய் நிலமானால் உயரும்
விண்செய் முகில்கூட மயங்கும்
தண்மையின் உருமழையாய் மலரும்.

ஏர் பூட்டும் இயந்திரமும் கொண்டாய் - அதனால்
நேரேற்றம் பற்பலவும் கண்டாய்
ஏறெடுத்துப் பார்க்கும் வண்ணம் - எம்மை
ஏடெடுத்துப் படிக்க வைத்தாய்

பலவரிகள் புனைந்த மகள் நானே
ஒருவரியும் எழுதிலனே நினையே
இக்கவியை சமர்ப்பிக்கும் நாளே
அக்குறையும் நிவர்த்தியுறும் தானே.

கவிதாயினி சுதா குமரன்

 

கவிதாயினி சுதா குமரன்

July 13, 2016

வளலாய் மண்ணிலே பிறந்து வளர்ந்து வாழ்ந்து முடித்த எமது பேரனார் ஆறுமுகம் நாகலிங்கம் அவர்கள் மறைந்து இருபத்தைந்து வருடங்கள் கடந்து விட்ட நிலையில் அந்நாளில் அவர்கள் வாழ்ந்த காலத்தின் சுவடுகள் கலந்த பதிவுகள்

பனை

கற்பனை உலகம் கண்ட மரம்
விண்ணுலகில் உண்டாம் கற்பகதருவாம்
இப்புவி தன்னில் அப்பயன் தந்தது
கற்பனை மரமல்ல கரும்பனை ஒன்றே

பார்த்துப் பார்த்து வளர்க்கவில்லை
ஏந்தி நீரை ஊற்றவில்லை
கிளையின்றி வளர்ந்தாலும்
அளவின்றிப் பயனளிக்கும்

கீழிருந்து மேல் நோக்கி
கிழங்கு தொட்டு வளமாகும்
ஊர்தோறும் பனந்தோப்பு
உயரந்துயர்ந்து வளரந்திருக்க

நாடு தோறும் சூழ்ந்த வினை
நலிவடைய வைத்ததுவே
கூவிவந்த குருட்டுக் கணை
ஆவிகெடச் செய்ததுவோ ?
ஒங்கி நின்ற உருவங்கள்
ஒருக்களித்துப் படுத்தனவோ ?

உத்தமர்க்கு உதாரணமாய்
இத்தரணி புகழ்கின்ற
உன் நிலையே இதுவென்றால்
உன் நிழலிருந்தோர் நிலையென்ன ?

முன்னோர் கண்ட பன்னம்

ஆடம்பரப் பொருட்களுக்கு
அவசியமற்ற காலத்தில்
கண்ணைப்பறிக்கும் நிறங்களைக்
கருத்தில் கொள்ளா நேரத்தில்
முன்னோர் எண்ணத்தில் உதித்து – கை
வண்ணத்தில் வளரந்த கலை பன்னம்.

பனையிலே ஓலை வெட்டி
பக்குவமாய் பதப்படுத்தி
பத்திரமாய் அதை வார்ந்து
அத்தனையும் கழிவின்றி
நார் ஈர்க்கு ஓலையென
நற்பன்னப் பொருளாகும்.

படுத்துறங்க பாய் முதலாய்
எடுத்து வைக்கப் பெட்டி கடகம்
பாரம் தூக்கப் பறியிருக்கும்
நாரும் அதில் சேர்ந்திருக்கும்.

வண்ண வண்ணப் பெட்டிகள்
வகை வகையாய் அடுக்கி வைத்து
எண்ணுகின்ற பொழுதெல்லாம்
எடுத்து அதில் பொருள் வைப்பர்.

கையடக்கப் பெட்டி முதல்
கனரகப் பெட்டி வரை
ஒவ்வொன்றாய்ப் பெயர் வைத்து
ஒன்றொன்றாய் சேர்த்திருப்பர்

இயற்கையொடு இயைந்த வாழ்வில்
இன்னலில்லா இன்பமயம்
செயற்கை கண்ட நெகிழியிலே
சிதைந்தது பன்னமும் தான்

பன்னத்தைப் பறிகொடுத்து  -  பிளாஸ்டிக்
வண்ணத்தில் வாழ்வென்று
கண்கவரும் பொருட்களிலே
எண்ணத்தைச் சிதறவிட்டோம்

என்னதான் கண்டோமென்று கண்ணைத்
திறக்கையிலே வழியெதுவும் தெரியவில்லை
விழி பிதுங்கி நிற்கின்றோம்.

 

வளலாயில் பட்டங்கள்

பொங்கல் காலம் வரப் பொங்குமின்பம் கூடவர

வங்கக் கடலோரம் வானுயர்ந்த பட்டம் விட

வாலிப நெஞ்சமெல்லாம் கோலப்பட்டம் கட்ட

நூலும் கோலுமாகத் திரிந்த காலமது.

 

கொக்குகள் வானில் கொடுநஞ்சுப் பாம்பைக்

கட்டியிழுத்துச் செல்வது போலிருக்கும் பல பட்டம்

நூலோடு நூலாக இணைந்திருக்கும் மின்னோட்டம்

உடுக்களோடு போட்டியாக ஒளி விளக்கேற்றி வைக்கும்.

 

மின்மினிப் பூச்சியெல்லாம் விண்ணிலே வீடுகட்டி

விரும்பி வாழப் போனதுபோல் நினைவுவரும்

மேல்வானின் பட்டங்கள் வளலாயைத் தரிசித்து

கண் சிமிட்டிச் சிரிப்பது போல் கற்பனையும் அதில் வளரும்.

 

வளலாயின் வான் வெளியில் வலம் வந்த பட்டமெல்லாம்

காணாமல் போய்விடக் கனடாதான் காரணமா?

பாழும் போர்சூழ்ந்து வளம்நிறைந்த வளலாயும்

மாளும் நிலையொன்று வந்தது தான் காரணமா?

 

வாழ்க்கை ஒரு வட்டம் என்ற வாக்கியமே மெய்யாக

வசப்பட்டிருக்கிறதே வளலாயும் மீண்டுமின்று

பறந்து சென்ற பட்டங்கள் திரும்பியினித் தான்வருமா?

வங்கக் கடற்காற்றை வசம் செய்யும் நிலைவருமா?

கவிதை வரிகள் சுதா குமரன்

மாணிக்கவாசகர் என்னும் பெயரேற்று - வளலாய்
மண்ணின் மைந்தனாக என்றும் வாழ்ந்தவரே!
மக்களுக்கு நல்ல தந்தை மட்டுமன்றி - மரு
மக்களுக்கும் நல்ல மாமனாக மிளிர்ந்தவரே!

எண்ணில் அடங்காதோர் எண்ணியலைக் கற்பதற்கு
கண்ணெனக் கணக்கறிவை கருத்துடனே ஈந்தவரே!
ஆசிரியப் பணியோடு ஆளுமையும் மேலோங்க
அரும்பணிகள் பலசெய்து அதிபராக உயர்ந்தவரே!

வானுறையும் தெய்வத்தின் வசப்பட்ட நாள் கடந்து
ஆண்டொன்று ஆனதென்று அறிவுதான் சொல்கிறது.
நியூட்டன் சொல்லாத நினைவீர்ப்பு விசையுந்த
நிகழ்வுகள் தான் முன்வந்து நிழலாகப் படிகிறது.

அகன்ற பெருவெளியில் ஒளியேற்றும் கதிரவனாய்
பகன்ற பெருங்கல்வி அகல் விளக்குகளாய் அகிலமெங்கும்
சுழன்று சுடர்விட்டு சுற்றிவரும் வேளையிலே
மறந்தும் உமையுலகம் என்றேனும் மறந்திடுமா?

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி

என்றும் குடும்பத்தினர் நினைவில்

கவிதை வரிகள் அன்பு மருமகள் திருமதி சுதா குமரன்

பாக்கு நீரிணையின் பருவக் காற்றுகள் தாலாட்டிச்செல்லும் ஒரு அழகிய கிராமம் வளலாய். கடற்கரையோடு கூடிய மணற்பாங்கான பிரதேசத்தையும், குளக் கரையோடு கூடிய களிமண் பிரதேசத்தையும், இன்னொரு புறத்தே செக்கச் சிவந்திருக்கும் செம்மண் வளத்தையும் கொண்ட பிரதேசம். ஆங்காங்கே கூடாரம் அமைத்தது போல் ஓங்கி வளர்ந்திருக்கும் பனை மரத்தோப்புகள் - அணில்களின் கூடாரம். உணவுப் பொருளுடன் எட்டிப் பார்த்தால் கன்னத்திலே கோலமிட்டு தட்டிப்பறித்துச் செல்லும் காக்கைகளின் சரணாலயம். மிளகாய்த் தோட்டங்கள், கூட்டம் கூட்டமாகப் பறந்து செல்லும் பச்சைக் கிளிகளின் மாநாட்டுக் கூடம். இந்த ஊரில் பெண்களைப் பார்த்தால் ரம்பை, ஊர்வசியிடம் வரம் வாங்கி வந்திருப்பார்களோ என எண்ணத் தோன்றும். 

இவையெல்லாம் இன்றல்ல. அது ஒரு காலம். வான் வழித் தளத்துக்கு வழி கொண்ட காரணத்தாலோ என்னவோ இரண்டு தசாப்தங்களின் இருள் சூழ்ந்த படலத்தில் இங்கே கானகம் குடி புகுந்தது. மீண்டும் காலத்தின் கதவுகள் மெல்லத் திறக்கப் பட்டு இவ்வூரின் ஒரு பகுதிக்கு வழி விடப்பட்ட போது வளலாய் விநாயகப் பெருமானின் வாயில் மீண்டும் தட்டப்பட்டது. அவ்வேளையிலே என் மனதில் தோன்றிய வரிகளின் விவாதத்தை இங்கே பிரதி செய்வதில் தவறில்லை என எண்ணுகின்றேன். நன்றி.

வளலாய்ப் பிள்ளையார்
*******************
வளலாய்ப் பதியுறையும்
வேழ முகப் பெருமானே !
வள்ளி மணாளனுக்கு மூத்தவனே
பிள்ளையார் எனும் பேறு பெற்றவனே!

ஆலமரம் நுழை வாயில்
அரசமரம் முன்வாயில்
அமர்ந்திருக்கும் கோலமது
ஆகீசன் உன் சிறப்பு.

ஊரெல்லாம் ஒலியெழுப்பும்
உயர் மணிக் கோபுரத்தின்
கண்டா மணியோசை
டாண் டாண்என்றொலிக்கும்

சங்கு ஒலிக்கும் சங்கீதம்
சந்தனத்தின் நறுமணத்தில் - உன்
சந்நிதியில் சனத்திரளாய்
சரணடைய வைப்பவனே!

நாரதரின் சதிவலையில்
நாதன் அவன் சிக்கி நின்று
ஞாலத்தைச் சுற்றி வர
கால அவகாசம் இட்டான்.

பெருச்சாளி மீதேறிப்
பெருங்கடலைத் தாண்டாமல்
அருகிருந்த பெற்றோரை
ஆறுதலாய் சுற்றி வந்தாய்.

உயர்மதிக்காரன் என்று
உன்னைப் புகழ்ந்தார்கள்
கணபதியே உன் வித்தையை நீ - இக்
கற்பதியில் காட்டினாயோ?

வளலாய்ப் பிள்ளையாரே
வனவாசம் போ என்று
யார் உன்னைப் பணித்தாரோ
நாரதரும் வந்தாரோ?

பெருச்சாளி மீதேறிப்
பெருங் காட்டைத் தேடாமல்
கருவறையில் அமர்ந்தபடி
காடாக்கி வாழ்ந்தாயோ?

வனவாசம் முடித்திருக்கும்
வளலாய்ப் பிள்ளையாரே
இருகரமும் செவிபற்றி
இருந்து எழுந்து வணங்குகிறோம்.

வளலாயின் வலி சுமந்த வரிகளாக இப்பதிவு 
******************************

எந்தையும் அவர் தந்தையும் 
சிந்தையிலே நிறைவுடனே 
சிந்திய வியர்வைச் 
செம்மையின் செழுமை எங்கே?
வரலாற்றுச் சுவடுகளின் 
வாழ்விடங்கள் தானெங்கே?


சிட்டுக் குருவிகளாய் 
சிறகடித்துப் பறக்கையிலே 
பட்டுக் கன்னங்களை 
தொட்டுத் தழுவிய 
மல்லிகையின் மணம் சுமந்த 
மெல்லிளந் தென்றல் எங்கே?


அணிலோடு இணையாக 
தனியாக ஊஞ்சலிலே 
அரங்கேற்றம் செய்யாமல் 
ஆடிய மா மரமெங்கே?
தேடிய மாங்கனி எங்கே?

வெள்ளம் வழிகையிலே 
துள்ளியதில் விளையாடி 
பள்ளிக்கு நாம் சென்ற 
வெள்ள வாய்க்கால் வீதி எங்கே?

புங்கடி புளியடி 
இவ்விடம் எவ்விடமென 
கண்ணைத் திறந்து கொண்டு -சொந்த 
மண்ணில் நின்று கொண்டு 
கேட்டுக் கொள்கின்ற 
வாட்டம் தானென்ன?


வளலாயின் வலி சுமந்த 
வரிகளாக இப்பதிவு 
பெரும்பான்மைப் பதிகளுக்கு 
பொருந்துகின்ற ஒரு பதிவு.

ஆசிரியர் திரு குமரனின் திருமண நிகழ்வின் நிழற்ப்படங்களைக் காண கீழேயுள்ள நிழற்படத்தைக் கிளிக்கி காணவும்

சாதனை மாணவியைப் பயிற்றுவித்தவர் ஆசிரியர் திரு தவக்குமர் ஆவார்

October 1, 2016

திரு கிரிதரன் குமாரசாமி அவர்கள் கடல் கடந்த நிர்வாக சேவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டமை எல்லோருக்கும் தெரிந்ததே. அவர் தனது சேவையைச் சிறப்புற ஆற்ற அந்நியமொழியொன்றில் பாண்டித்தியம் பெற்றிருத்தல் அவசியம். 1. பழமையும் பாரம் பரியமும் மிக்க மொழி 2. ஏறத்தாழ 130 கோடி மக்களால் பேசப்படுகின்ற மொழி 3. உலக வணிக பொருளாதரத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடு சீனா, எனவே மேற்கூறிய காரணங்களுக்காக இவர் பாண்டித்தியம் பெற தேந்ந்தெடுத்த மொழி சீனம் ஆகும். சீன அரசாங்கம் இவர் சீன மொழியில் பாண்டித்தியம் பெற ஒரு வருட புலமைப் பரிசில் வழங்கியுள்ளது. இருப்பினும் உலகிலும் சீனாவிலும் பிரசித்தி பெற்ற பீஜிங் பல்கலைக்கழகத்தில் நான்கு மாதங்களுக்குள் நிறைவு செய்து திரும்ப எண்ணியுள்ளார். அவர் முயற்சிகள் வெற்றி பெற்று மேன் மேலும் வளலாய் கிராமத்திற்கும் தனக்கும் பெருமை சேர்க்க வாழ்த்தும் வளலாய் உறவுகள்.

October 6, 2015

இலங்கை கடல்கடந்த நிர்வாக சேவைக்கு
(SRILANKA OVERSEAS SERVICE – SLOS GRADE – III)
தெரிவு

இலங்கையின் அதியுயர் நிர்வாக சேவையான “இலங்கை கடல்கடந்த நிர்வாக சேவைக்கு”  எமது கிராமத்தைச் சேர்ந்த திரு கிரிதரன் குமாரசாமி அவர்கள் 14.09.2015 அன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார் இவர் தனது ஆரம்பக் கல்வியை யா / வளலாய் அ.மி.த.க. பாடசாலையிலும் இடைநிலை மற்றும் உயர் கல்வியை யா / இடைக்காடு மகா வித்தியாலயத்திலும் கற்றார். 1995 இல் யாழ் பல்கலைக் கழகத்தில் கலைப் பிரிவுக்குத் தெரிவு செய்யப்பட்ட இவர் இளங்கலை (புவியியல்) சித்தி பெற்றார்.
சித்திரை 7 2015, கொழும்பு ரெலிகிராப் பத்திரிகையில் வெளிவிவகார அமைச்சினால் (COLOMBO TELEGRAPH) வெளியிடப்பட்ட விபரங்களின் படி இலங்கை கடல்கடந்த சேவைக்காக தெரிவுசெய்யப்பட்ட 42 நபர்களிலில் அகரவரிசைப் படி 18 வது ஆளாக காணப்படும் கிரிதரன் குமாரசாமி என்பவர் வளலாய் அச்சுவேலி ஐச் சேர்ந்தவர் என்பதை தெரியப்படுத்துவதில் வளலாய் இணையம் பெருமைப்படுகின்றது.
திரு கிரிதரன் குமாரசாமி B.A., Diploma in Education, M.A., M.Ed., 2005 இலிருந்து 2007 வரை வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியா லயத்திலும் 2007 இலிருந்து 2012 வரை வவுனியா இறம்பைக்குளம் மகா வித்தியாலத்திலும் 2012 இலிருந்து இன்றுவரை யா / நெல்லியடி மத்திய கல்லுரியிலும் ஆசிரியராக பணியாற்றுகின்றார். “பௌதீகப் புவியியல்” “சூழற்புவியியல்” ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ள கிரிதரன் ஆசிரியர் முதுகலைப் படிப்பை பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் M.Ed. பட்டத்தை யாழ் பல்கலைக்கழகத்திலும் பொருளாதரச் சிரமங்கள் இடம்பெயர்வுகளுக்கு மத்தியிலும் தன்னாற்றலால் ஆங்கில மொழி மூலம் கற்றுத் தேர்ந்துள்ள தோடு வளலாய் கிராமத்துக்கும் பெருமையும் புகழும் சேர்த்துள்ளார். அவர் SLOS - GR II, GR I தேர்வுகளிலும் சித்தி பெற்று வெளிநாட்டு தூதுவராக பதவி உயர்வு பெற வாழ்த்தும் கனடா வாழ் வளலாய் உறவுகள். 

ஆடி மாதம் மன்மத வருடம் 29ம் நாள் (29.07.2015) இடம்பெற்ற வளலாய் சித்திரத்தேர் வெள்ளோட்ட நிகழ்வின் போது வெளியிடப்பட்ட இசைத்தட்டின் ஒலிக்கோவை வளலாய் உறவுகளுக்காக  இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
இப்பாடலுக்கான  வரிகள்  -  வளலாய் தேவஸ்த்தான அறங்காவல் சபைத் தலைவர் ஞானரூபனின் மகன் கோகியன்
இப்பாடலைப் பாடியவர்  -  வளலாய் சங்கீத ஆசிரியை திருமதி ஞானகுணேஸ்வரி கமலச்செல்வன்

October 8, 2014

இலங்கையில் சிறந்த ஆசிரியருக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்படும் ஜனாதிபதி உயர் விருதான 'ஆசிரியர் பிரதீபா பிரபா விருது' வளலாயைச் சேர்ந்த, ஆவரங்கால் மகஜன வித்தியாலயத்தில் பணியாற்றும் கணித ஆசிரியையும் உதவி அதிபருமான செல்வி திலகவதி ராமசாமிக்கு ஐப்பசி 6, 2014 அன்று மகரகம கல்வி ஆராய்ச்சி நிறுவன மண்டபத்தில் வழங்கப்பட்டது. இம்மகிழ்ச்சியை இவரது உறவினர்கள், வளலாய் உறவுகளுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் கொள்கின்றனர்.

October 14, 2014

Section 10

Content 10

Pillaiyar
Pillaiyar